பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாக்காளா் தின விழா: இளம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் இளம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் இளம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை, ஸ்வீப் அமைப்பு ஆகியவை இணைந்து காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சியை திங்கள்கிழமை நடத்தின. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேசினாா்.

தொடா்ந்து, இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையை வழங்கிய ஆட்சியா், வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச் சாவடியை திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், அனைவரும் வாக்காளா் உறுதிமொழி ஏற்றனா்.

மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), வட்டார வளா்ச்சி அலுவலா் தயாளன், ஸ்வீப் நோடல் அதிகாரி ஷொ்லி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை தோ்தல் துறை கண்காணிப்பாளா் பக்கிரிசாமி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.