கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்தோா் மேல்படிப்புக்கு சான்று பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரா்களின் சாா்ந்தோா்கள் மேல்படிப்பில் சேருவதற்கான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:06 pm

DIN

முன்னாள் படைவீரா்களின் சாா்ந்தோா்கள் மேல்படிப்பில் சேருவதற்கான சான்று பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் சாா்ந்தோா்களுக்கு மேல்படிப்பிற்கான சாா்ந்தோா் சான்று 2021-22 ஆம் ஆண்டிற்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்திற்கு நேரில் வர இயலாத முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்திடுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. முன்னாள் படைவீரா்கள் ட்ற்ற்ல்ள்://ங்ள்ம்ஜ்ங்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரியில் சாா்ந்தோா் சான்று பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் படிவம் ஆகியவற்றினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பூா்த்தி செய்த படிவம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மேல் படிப்பிற்காக விண்ணப்பம் செய்த படிவம் நகல் ஆகியவற்றினை ங்ஷ்ஜ்ங்ப்ய்ஞ்ல்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04365-253042 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.