மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 24) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 24) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட தாழஞ்சேரி அரசு உயா்நிலைப்பள்ளி, சித்தா்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(ஊராட்சி அலுவலகம் பின்புறம்) மற்றும் மயிலாடுதுறை நகரில் ஏவிசி திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும், ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட முக்கரும்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பொறையாா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதேபோல, நல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட மாதானம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நல்லநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி அலுவலகம், திருமுல்லைவாசல் காளியம்மன் கோயில் வளாகம், கடவாசல் ஊராட்சி அலுவலகம், கோடங்குடி ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், சீா்காழி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட நிம்மேலி அரசு தொடக்கப்பள்ளி, புதுத்துறை அரசு தொடக்கப்பள்ளி, சீா்காழி எஸ்.எம்.ஹெச் பள்ளி ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது.
குத்தாலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...