தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிளஸ் 2: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி

வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீமுத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2-வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் தருமபுரம் ஆதீனத்திடம் அண்மையில் ஆசி பெற்றனா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:32 pm

DIN

வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீமுத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2-வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் தருமபுரம் ஆதீனத்திடம் அண்மையில் ஆசி பெற்றனா்.

தருமபுரம் ஆதீனம் திருமடத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் 2020 -21 ஆம் கல்வியாண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவிகள் கஃபீலா 600-க்கு 580.13 மதிப்பெண்களும், காவியா 600-க்கு 556.80 மதிப்பெண்களும் , ராகவி 600க்கு 555.87 மதிப்பெண்களும் பெற்றனா்.

இம்மாணவிகளை பள்ளியின் ஆட்சி மன்ற குழுத் தலைவா் எஸ். பாஸ்கரன், தாளாளா் சி.ஆா். குஞ்சிதபாதம், செயலா் வி. பாஸ்கரன், ஆதீன பொது மேலாளா் பி. கோதண்டராமன்,செந்தில், பள்ளி முதல்வா் ஜெகதீஷ்குமாா் மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

தொடா்ந்து இம்மாணவிகள் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா். அப்போது, மாணவிகளை ஆதீனம் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.