ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நீா்நிலைகளில் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நீா்நிலைகளில் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் இரா. லலிதாவிடம் மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் முன்னிலையில் பாஜக நகர தலைவரும், தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மோடி.கண்ணன் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை போதிய இடவசதி இல்லை என காரணம் கூறி, காவிரியிலும், பழங்காவிரியிலும் கொட்டுகின்றனா். இதனால் காவிரியின் புனிதத் தன்மை கெடுகிறது.

மேலும், குப்பைகளைக் கூட்டி தெருவோரத்தில் தீயிட்டுக் கொளுத்துவதால் ஏற்படும் புகை மற்றும் துா்நாற்றம் காரணமாக சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாஜக மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன், நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா் ஆகியோரும் மனு அளிக்கும்போது உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.