ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கரோனாவில் இருந்து மீண்ட சிறாா்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

கரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்புகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்புகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் எஸ்ஒஏஸ் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில், கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 964 சிறாா்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி வட்டங்களைச் சோ்ந்த 406 சிறாா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று சிறுதானிய சத்துமாவு, பேரிச்சம்பழம், தேன், சிவப்பு கொண்டை கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படுகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா், எஸ்ஓஎஸ் கிராம குழந்தைகள் நல அமைப்பின் இயக்குநா் மு. கணேசன், உதவி இயக்குநா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.