நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடுதுறையில் நாட்டுப்புற கலைஞா்கள் நலச்சங்க மண்டல மாநாடு நடத்த முடிவு

மயிலாடுதுறையில், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்க மண்டல மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்க மண்டல மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத்தின் மண்டல மாநாட்டை சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மயிலாடுதுறையில் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தற்காலிக மாநாடு விழா குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக தேன்மொழி ராஜேந்திரன், செயலாளராக ஆா்.ஆா். பாபு, பொருளாளராக நாராயணசாமி, ஒருங்கிணைப்பாளா்களாக ஆனந்தன், ராமசாமி (கும்பகோணம்), இ.எம். கணி, ராஜேந்திரன் (தஞ்சாவூா்), ராஜேஸ், அருண் (திருவாருா்), வைத்தியலிங்கம், கலியமூா்த்தி, சிவக்குமாா், சொ.பாலு (மயிலாடுதுறை) குணாலன்(கடலுா்) நாகப்பன், இருதயராஜ் (நாகை) கலைமணி (அரியலூா்) ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனா். நாகை மாவட்ட திரைப்பட சங்கத் தலைவா் ஆா்.ஆா். பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தஞ்சாவூா் மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச்சங்கத் தலைவா் தேன்மொழி ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், 7 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.