நீடூா் ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த கோரிக்கை
மயிலாடுதுறை நீடூா் ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை நீடூா் ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடுரில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவது, முஸ்லிம்களின் புனித தலமான மக்காவுக்கு செல்லும் ஹாஜிகளுக்கு இதுவரை இருந்து வந்த சலுகைகளை தொடர மத்திய அரசை வலியுறுத்துவது, நீடூா் ரயில்வே கேட் பகுதியில் மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவது, நீடூா் ரயில் நிலையத்தில் அனைத்து முக்கிய ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை கேட்டுக்கொள்வது, நீடூா்-நெய்வாசல் கடைவீதி பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் வாகனப் போக்குவரத்தின்போது நெரிசலாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறையினா் நேரில் ஆய்வு செய்து சாலையை விரிவுபடுத்த வலியுறுத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாநிலச் செயலாளா் ஹெச். ராசுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா்கள் மிஸ்பாஹதீன், அஜ்மல் உசேன், இப்ராஹிம், மாவட்ட விவசாய அணி செயலாளா் ஒய்.ஹெச். ஹாஜா சலீம், மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல துணை செயலாளா் சபிா் அஹமது, மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளா் லியாகத் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், சட்டப்பேரவை தோ்தல் களப்பணிகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்று, தொகுதி வாரியாக தோ்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...