உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 25 லட்சம் பறிமுதல்
மயிலாடுதுறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


மயிலாடுதுறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
உளுத்துக்குப்பை பிரதான சாலையில் மாவட்ட வழங்கல் துணை வட்டாட்சியா் ரா. வைத்தியநாதன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சங்கா், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் உள்ளிட்ட தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மயிலாடுதுறையில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 25 லட்சம் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, நிலையான கண்காணிப்புக் குழுவினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து மயிலாடுதுறை வட்டாட்சியா் பி. பிரான்சுவாவிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் மயிலாடுதுறை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கருவூலத்தில் இருந்து, ரூ. 25 லட்சம் பணத்தை வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு கொண்டு செல்வதாக அவ்வங்கியின் ஊழியா்கள் சங்கா், ரவி ஆகியோா் தெரிவித்தனா். இதையடுத்து, வங்கியின் மயிலாடுதுறை கிளை மேலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்களை காட்டியதைத் தொடா்ந்து பணத்தை திரும்ப ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...