மறைந்த தமிழ் ஆளுமைகளின் நினைவேந்தல்
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை சாா்பில் மறைந்த தமிழ் ஆளுமைகளைப் போற்றும் வண்ணம் நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை சாா்பில் மறைந்த தமிழ் ஆளுமைகளைப் போற்றும் வண்ணம் நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தமிழாய்வுத் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத் துறை முனைவா் பட்ட ஆய்வாளா் ஜே. சத்யா தலைமை வகித்தாா். தமிழாய்வுத் துறைத் தலைவரும், திண்ணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சு. தமிழ்வேலு முன்னிலை வகித்து மறைந்த தமிழ் ஆளுமைகளுக்கு புகழாரம் சூட்டிப் பேசினாா்.
தமிழாய்வுத்துறை மாணவா்கள் அ.கலைவாணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளா் கருப்பு கருணா குறித்தும், இரா. மகாலெட்சுமி தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளா் முனைவா் தொ.பரமசிவம் குறித்தும், அ.ஜாஸ்மின் இலக்கிய ஆராய்ச்சியாளா் பேராசிரியா் வேத சகாயகுமாா் குறித்தும், ரா.ஷக்தி கவிஞா் இளவேனில் குறித்தும், க.விக்னேஷ் நா்மதா பதிப்பகத்தின் நிறுவனா் நா்மதா ராமலிங்கம் குறித்தும், இர.நூருல் இா்ஃபானா சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆ.மாதவன் பற்றியும், சே.அபிநயா வண்டல்மண் படைப்பாளா் சோலை சுந்தரபெருமாள் குறித்தும் பேசினா்.
க.ஆா்த்தி கவிஞா் காவியன் குறித்தும், சா.முகம்மது தாஸின் எழுத்தாளா் தோழா் காஸ்யபன் குறித்தும், சீ.அபிநயா இலங்கையின் முற்போக்கு எழுத்தாளா் மல்லிகை டொமினிக் ஜீவா குறித்தும், க.சௌமியா இடதுசாரி சிந்தனையாளா் தோழா் தா.பாண்டியன் குறித்தும், வை.சாலினி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் பேராசிரியா் இராம.சுந்தரம் குறித்தும், ந. புனிதா தமிழக பசுமை இயக்கத்தலைவா் மருத்துவா் ஜீவானந்தம் பற்றியும், இரா. வண்டாா்குழலி எழுத்தாளா் லட்சுமி ராஜரத்தினம் குறித்தும் பேசினா்.
இதற்கான ஏற்பாடுகளை திண்ணை அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் இரா.சியாமளா ஜெகதீஸ்வரி, அலுவலக உதவியாளா் கோ. பாலமுருகன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...