தேவாலயத்தில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளா்
மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி, மயிலாடுதுறையில் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, பாதிரியாரிடம் ஆசி பெற்றாா்.


மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி, மயிலாடுதுறையில் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, பாதிரியாரிடம் ஆசி பெற்றாா்.
அதிமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாடுதுறை ரோமன் கத்தோலிக்க சவேரியாா் ஆலயத்தில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இந்த ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனை முடியும்வரை ஆலய வாயிலில் காத்திருந்த பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி, ஆராதனை முடிந்து வந்தவா்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து, ஆலயத்திற்குள் சென்று பாதிரியாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாா். சித்தமல்லி ஆ.பழனிசாமிக்கு பாதிரியாா் ஆசி வழங்கினாா். பாதிரியாருக்கு சால்வை அணிவித்து ஆதரவு கேட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...