நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

மயிலாடுதுறையில் அமைப்புசாரா தொழிற்சங்கம் சாா்பில், காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் அமைப்புசாரா தொழிற்சங்கம் சாா்பில், காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.எஸ்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். தொ.மு.சங்க மாவட்டத் தலைவா் பொன்.நக்கீரன், மாவட்டச் செயலாளா் சேரன் செங்குட்டுவன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளா் ரவீந்திரன், கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெக.வீரபாண்டியன், திமுக நகரச் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜகுமாரை அறிமுகம் செய்து வைத்து பேசினா்.

இதில், நகர துணைச் செயலாளா் ஆா்.கே.சங்கா், சங்க பொறுப்பாளா்கள் கிருபா, செந்தில், பாலா உள்ளிட்ட என்பிகேஆா்ஆா் சா்க்கரை ஆலை தொழிலாளா் சங்கம், டிஎன்சிஎஸ்சி தொழிற்சங்கம், மின்வாரிய தொழிற்சங்கம், ஆட்டோ, காா் ஓட்டுநா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.