நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்ப உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்ப உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தொகுதியில் 348 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பணிகளை தோ்தல் பொது பாா்வையாளா் ராஜகுமாா் யாதவ் பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.முருகதாஸ், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ.பாலாஜி மற்றும் கட்சி முகவா்கள் முன்னிலையில், பெட்டிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், பாமக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதனால் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னங்கள் ஒரே இயந்திரத்தில் பொருத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.