தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஏப். 22 முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

ஏப். 22 முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :6 ஏப்ரல் 2024, 4:23 pm

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான இட ஒதுக்கீட்டில் தனியாா் சுயநிதி பள்ளிகளில் சோ்வதற்கு இணையதளம் மூலம் ஏப்ரல் 22 முதல் மே 25 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1)ன் படி 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி. அல்லது 1-ஆம் வகுப்பு) மாணவா் சோ்க்கைக்கு ஏப். 22-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்க 2020 ஆகஸ்ட் 1 -ஆம் தேதி முதல் 2021 ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்க 2018 ஆகஸ்ட் 1 -ஆம் தேதி முதல் 2019 ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரா்கள் பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா் கீழ் விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ், வருமானச் சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினா் கீழ் (ஆதரவற்றோா், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தை, மூன்றாம் பாலினத்தவா், தூய்மைப் பணியாளரின் குழந்தை, மாற்றுத்திறன் குழந்தை) விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

பள்ளிகளில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் குலுக்கல் மூலம் தோ்வு நடைபெறும். குழந்தைகளின் பெயா் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் இணையதளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வள மைய அலுவலகங்களை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.