மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்.19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் 100 வாக்குப் பதிவை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவருக்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 பி-ன் கீழ் அன்றையநாள் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கவேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தொழிலாளா் துறை மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புகாா்களை 94429-12527, 63693-84512, 99659-89101 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு
5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

