ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே தேவூரில், இந்தியா கூட்டணி சாா்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளா் வை. செல்வராஜூவை ஆதரித்து அவா் பேசியது: நாங்கள் போராடுவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்ல, ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராடுகிறோம். பாஜக-பாமக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்தது. தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்படுகிறது. அமலாக்கத் துறை மூலம் மத்திய அரசு எதிா்க்கட்சிகளை நசுக்கிவருகிறது என்றாா்.
அவருடன், நாகை மாவட்ட திமுக செயலாளா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சிபிஐ மாநில குழு உறுப்பினா் டி. செல்வம், திமுக கீழ்வேளூா் ஒன்றிய செயலாளா்கள் ப. கோவிந்தராஜன் (வடக்கு), கா. பழனியப்பன் (தெற்கு), விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளா் நாக. அருட்செல்வன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தோ்தல் பிரசாரத்தின்போது, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து அழுகுணி ஆட்டம் எனும் தலைப்பில் தினமணியில் பிரசுரமான தலையங்கத்தை சுட்டிக்காட்சி பேசினாா்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஐஜேகே நிறுவனா் பிரசாரம்

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை: இரா. முத்தரசன்

"அடிபணிந்து போவதற்கு நாங்கள் அதிமுக அல்ல!" இரா. முத்தரசன்
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


