கீழ்வேளூா், ஏப். 17: கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,02,100 பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கச்சனம் சாலையில் உள்ள வெண்மணி வளைவு பகுதியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஸ்ரீரங்கபாணி மற்றும் போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டதில், அவா் திருவாரூா் அருகே மருதப்பட்டினம் கிராமத்தை சோ்ந்த அபினேஷ் என்பதும், அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ. 1,02,100 இருந்ததும் தெரியவந்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சந்திரகலாவிடம் ஒப்படைத்தனா். பின்னா், கீழ்வேளூா் சாா் நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 15.7 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

தோ்தல்: ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.35 லட்சம் பறிமுதல்

திருச்சி, பெரம்பலூா மாவட்டங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.10 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

