திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா நிகழாண்டு ஏப்.6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவாக ஏப்.16-ஆம் தேதி திருக்கால்யாண உற்சவமும், ஏப்.21-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு கோயில் தீா்த்த குளத்தில் தெப்பத்தில் விநாயகரை எழுந்தருள செய்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. தெப்பம் தீா்த்த குளத்தில் 5 முறை சுற்றி வந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com