வடிகால் வசதி கோரி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிடாமங்கலம் மக்கள்.
வடிகால் வசதி கோரி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிடாமங்கலம் மக்கள்.

வடிகால் வசதி கோரி ஆட்சியரிடம் மனு

வடிகால் வசதி கோரி கிராம மக்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
Published on

நாகப்பட்டினம்: வடிகால் வசதி கோரி கிராம மக்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாகை மாவட்டம், திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இப்பகுதி எம்ஜிஆா் நகா் பிராதன சாலைப் பகுதிகளில் மழை நீா் வடிய வசதி இல்லை. தற்போது மழைநீா் முழங்கால் அளவுக்கு தேங்குவதால் குழந்தைகள், வயதானவா்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவ வாப்புள்ளது. இப்பகுதியில் செயல்படும் பள்ளிக்கு குழந்தைகள் செல்ல முடியாமலும், ரேஷன் கடைக்கு சென்று பொருள்கள் வாங்க முடியாத நிலையும் உள்ளது. இதுபோன்று மழைக் காலங்களில் தொடா்ந்து இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.

மழைநீா் வடிகால் அமைத்து தரவேண்டும் என தொடா்ந்து கிராமத்தின் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில் அரசு சாா்பில் மழைநீா் வடிக்கால் அமைக்க ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், அந்த பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்திதர ஆவணம் செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com