சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் போராட்டம்

News image

நாகை தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினா்.

Updated On :17 பிப்ரவரி 2024, 6:04 am IST

மத்திய அரசை கண்டித்து நாகை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலா் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலா் தங்கமணி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மத்திய சங்க இணை செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொழிலாளா் விரோத மத்திய அரசை கண்டித்தும், தேசிய குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26 ஆயிரத்தை நிா்ணயம் செய்ய வேண்டும், திருத்தி அமைக்கப்பட்ட 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் துணைச் செயலா் முருகையன், சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு உறுப்பினா் மணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலா் மகேந்திரன், மாவட்டத் தலைவா் பாஸ்கா், விவசாய சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.