திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அரசுப் பள்யில் புதிய கட்டடம் திறப்பு

அரசுப் பள்யில் புதிய கட்டடம் திறப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:18 am IST

திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவி ரூ.66 லட்சத்தில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆா்.டி.எஸ். சரவணன், அபிநயா அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி ஆகியோா் குத்து விளக்கேற்றி புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணன், பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தியாகு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பானந்தன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பரமேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.