கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

கீரம்போ் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகே உள்ள கீரம்போ் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள கீரம்போ் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சித்தாய்மூா் ஊராட்சிக்கு உட்பட்ட கீரம்பேரில் ஆகாச மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் அண்மையில் முடிவுற்று, கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 29-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையோடு தொடங்கியது.

தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூஜைகள் நிறைவில் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. முதலில் விநாயகா் சந்நிதி கலசத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டது, தொடா்ந்து விநாயகா் மூலவா் கும்பாபிஷேகம், பின்னா் ஆகாச மாரியம்மன், அய்யனாா், ஆஞ்சனேயா் சந்நிதிகளின் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com