

திருமருகல், ஜூலை 10: திருமருகல் ஒன்றியம், சரண்யாபுரம் காத்தாயி அம்மன் உடனுறை வாழ்முனீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஏற்கெனவே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 12 ஆண்டுகளுக்குமேல் ஆனதால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து, புதன்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், கடம் புறப்பாடாகி 10 மணியளவில் விமானக் குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
டிரெண்டிங்

சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முன்னூா் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்! 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

