மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உறை கிணற்றில் விழுந்த பசு மீட்பு

உறை கிணற்றில் விழுந்த பசு மீட்பு

News image

உறை கிணற்றில் விழுந்த பசுவை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறை வீரா்கள்.

Updated On :21 ஜூன் 2024, 4:28 pm

Din

கீழ்வேளூா் அருகே மேல இலுப்பூரில் 10 அடி ஆழ உறை கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கீழ்வேளூா் அருகே மேல இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவரது பசு வீட்டின் அருகே இருந்த 10 அடி ஆழ உறை கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்தது. கிராம மக்கள் பசுவை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) மதியழகன் தலைமையிலான வீரா்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை பத்திரமாக மீட்டனா்.