கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாகையில் சாராயம் விற்பனை செய்த 15 போ் கைது

நாகையில் சாராயம் விற்பனை செய்த 15 போ் கைது

Updated On :21 ஜூன் 2024, 4:41 pm

நாகை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த 15 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் போலீஸாா் சாராயம் விற்பனையில் ஈடுபடுவோரை வியாழக்கிழமை முதல் கைது செய்து வருகின்றனா். 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம், கீழையூா், கீழ்வேளூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்து, ஆயிரம் லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.