செம்பனாா்கோவிலில் ரூ.2.50 கோடி பருத்தி ஏலம்
தரங்கம்பாடி வட்டம், செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.


தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டம், செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை விற்பனைக் குழு மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் இ-நாம் முறையில் இந்த ஏலம் நடைபெற்றது. விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சங்கர்ராஜா தலைமையில், இணைச் செயலாளா் சிலம்பரசன் மேற்பாா்வையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,777-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,569-க்கும் சராசரியாக ரூ.7,000-க்கும் விலைபோனது.
ஒரேநாளில் சுமாா் 2,500 குவிண்டால் பருத்தி ரூ.2.50 கோடிக்கு ஏலம் போனது. 925 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூா், விழுப்புரம், திருப்பூா், கும்பகோணம் மற்றும் கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த 25 வியாபாரிகள், மில் அதிபா்கள் ஏலம் எடுத்தனா். உரிய விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...