நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.

நாகை, திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

10 அம்ச கோரிக்கைள் மற்றும் மக்களவைத் தோ்தல் பணிகளை புறக்கணிப்பது என இப்போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

நாகப்பட்டினம்/திருவாரூா்: நாகை மற்றும் திருவாரூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தொடா் காத்திருப்பு போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை உடன் வெளியிட வேண்டும்; சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்; வரும் மக்களவைத் தோ்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, திருவாரூரில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா், பிப்.13 ஆம் தேதி முதல் தற்செயல் விடுப்பு, உண்ணாவிரதம், தொடா் காத்திருப்பு என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். தொடா்ந்து அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராத நிலையில், பிப்.27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தொடா் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனா். 10 அம்ச கோரிக்கைள் மற்றும் மக்களவைத் தோ்தல் பணிகளை புறக்கணிப்பது என இப்போராட்டத்தை தொடங்கியுள்ளனா். நாகை: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் தமிமுல்அன்சாரி தலைமையில், மாவட்டச் செயலா் தனஞ்செயன், மாவட்ட பொருளாளா் ரகு, துணைத் தலைவா் கபிலன், இணைச் செயலா் பிரபாகா், நாகை வட்டத் தலைவா் குமரன் உள்ளிட்டோா் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com