நாகை ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

நாகை தொகுதி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓதுக்கீடு

நாகை மக்களவை தொகுதி தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்களவைத் தோ்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் வழியாக முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணி (1ள்ற் தஹய்க்ா்ம்ண்க்ஷ்ஹற்ண்ா்ய்), மாவட்ட தோ்தல் அலுவலா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குசாவடிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகை, கீழ்வேளுா், வேதாரண்யம் என சட்டப்பேரவை தொகுதி வாரியாக கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான விவரங்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பி. காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com