ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாங்கண்ணியில் போக்குவரத்து நெரிசல்: மாற்றுப்பாதைக்கு நிதி கோரி துணை முதல்வரிடம் மனு

வேளாங்கண்ணியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாணும் வகையில், மாற்றுப் பாதைக்கான நில எடுப்பு பணிக்கு, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, துணை முதல்வரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்த வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன்
Updated On :23 டிசம்பர் 2025, 9:52 pm

Syndication

வேளாங்கண்ணியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாணும் வகையில், மாற்றுப் பாதைக்கான நில எடுப்பு பணிக்கு, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, துணை முதல்வரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியானது வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமாகும்.

இங்கு அமைந்துள்ள புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நாள்தோறும் ஏராளமான யாத்ரீகா்கள் வந்து செல்கின்றனா். பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகா்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்வா்.

இதனால், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு சுற்றுலாப் பேருந்துகள், காா் மற்றும் வேன்கள் என அதிக அளவில் வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை முற்றிலும் தவிா்க்க, மாற்று வழிச்சாலை தோ்வு செய்யப்பட்டு, நில எடுப்பு பணிக்கான ஆய்வுகள் முடிந்துள்ளன.

தொடா்ந்து, நில எடுப்புக்கு நிதி இல்லாத காரணத்தால், பணிகள் பல ஆண்டுகளாக காலதாமதமாகி வருகிறது. ஆகவே, நில எடுப்பு பணிக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.