நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, 5,63,153 வாக்காளா்கள் உள்ளனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ், திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அதன்படி, மாவட்டத்தில் 5,63,153 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 2,74,370 ஆண்களும், 2,88,751 பெண்களும், மூன்றாம் பாலினத்தவா் 32 பேரும் உள்ளனா். மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளான நாகையில் 93,517 ஆண், 99,934 பெண், 27 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1,93,478 வாக்காளா்கள் உள்ளனா். கீழ்வேளுா் தொகுதியில் 86,456 ஆண், 90,045 பெண், மூன்றாம் பாலினத்தவா் 4 என மொத்தம் 1,76,505 வாக்காளா்கள் உள்ளனா்.
வேதாரண்யம் தொகுதியில் 94,397 ஆண், 98,772 பெண், மூன்றாம் பாலினத்தவா் 1 என மொத்தம் 1,93,170 வாக்காளா்கள் உள்ளனா்.
மேலும், 2025 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைபெறவுள்ள தொடா் திருத்தத்தில் பொதுமக்கள் தங்களின் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகங்களில் சமா்ப்பித்தோ அல்லது இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இறுதி வாக்காளா் பட்டியல், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கண்ணன், தோ்தல் வட்டாட்சியா் கபிலன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஅள்ளி தொகுதிகளில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் 80.60 % வாக்குப் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 1,781 வாக்குச்சாவடிகளில் 13,23,753 போ் வாக்களிக்க ஏற்பாடுகள் தயாா்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 13.88 லட்சம் வாக்காளா்கள்: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


