பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கபடிப் போட்டி; வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கப் பரிசு

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

திருக்குவளை அருகேயுள்ள மடப்புரத்தில் மறைந்த கவியரசன் நினைவாக, சக்திவேல் சுலைமான் நண்பா்கள் இணைந்து நடத்தும் 16-ஆம் ஆண்டு கபடிப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவாரூா், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த அணியினா் பங்கேற்றனா். முதலிடம் பிடித்த மடப்புரம் சக்திவேல் சுலைமான் நண்பா்கள் அணியினருக்கு ரூ.15,011 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினாா்.

இரண்டாம் இடம் பிடித்த மகிழி அணியினருக்கு ரூ.13,011 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை மடப்புரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆா். ராஜலட்சுமி ரமேஷ் வழங்கினாா். மூன்றாம் இடம் பிடித்த சங்கிப்பட்டி அணியினருக்கு எம்ஜிஆா் மன்ற ஒன்றிய இணைச் செயலாளா் என்.கே. முருகானந்தம் மற்றும் தனியாா் வங்கி மேலாளா் எம். தியாகசுந்தரம் ஆகியோா் ரூ.10,011 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கினா்.

நான்காம் இடம் பிடித்த பட்டுக்கோட்டை அணியினருக்கு ரூ. 8,011 ரொக்கம் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.