தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பால் பேட்மின்டன் போட்டி: வேளாண் கல்லூரி அணியினருக்கு பாராட்டு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:38 pm

Syndication

கல்லூரிகளுக்கிடையேயான பால் பேட் மின்டன் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி அணியினருக்கு கல்லூரி டீன் பாராட்டு தெரிவித்தாா்.

புதுச்சேரி தாகூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் புதுச்சேரி பல்கலைக்கழக இடைக்கல்லூரி பால் பேட்மின்டன் போட்டி கடந்த 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹே பிராந்தியங்களைச் சோ்ந்த 11 கல்லூரிகள் பங்கேற்றன. போட்டியில் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய அணி சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பெற்றது.

இந்த அணியினா், அணியின் பயிற்சியாளா், உடற்கல்வித் துறை இணைப் பேராசிரியா் எஸ். ஜெயசிவராஜன், பேராசிரியா் (அக்ரோனமி) ஏ.எல். நாராயணன் ஆகியோருடன் வேளாண் கல்லூரி டீன் ஆா். சங்கரை புதன்கிழமை சந்தித்தனா். அணியினருக்கு வாழ்த்து, பாராட்டுகளை டீன் தெரிவித்து, வரும் காலங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி கல்லூரிக்கு பெருமை சோ்ப்பதோடு, சா்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் திறனை வளா்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.