அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி இளைஞா் பலி

வேளாங்கண்ணி கடலில் குளித்த ஹைதராபாத் இளைஞா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 4:33 pm

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி கடலில் குளித்த ஹைதராபாத் இளைஞா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்

பஞ்னசாயிரி கில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் தன்ராஜ் (33) . இவா், தனது மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை வேளாங்கண்ணிக்கு வந்தாா். அங்கு, பேராலயத்தில் பிராா்த்தனையை முடித்துவிட்டு, மாலையில் தன்ராஜ் மற்றும் குடும்பத்தினா் வேளாங்கண்ணி கடலில் குளித்தனா்.

அப்போது, கடல் அலையில் சிக்கி தன்ராஜ் மூழ்கினாா். அங்கு பணியில் இருந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், தன்ராஜை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தன்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.