தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

நாகூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சிவலிங்க பூஜை

மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை

Updated On :16 பிப்ரவரி 2026, 8:18 pm

நாகப்பட்டினம்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 ப்ருத்வி சிவலிங்க பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகூா் அருகே தெத்தியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு மண்ணால் செய்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிறிய வகை 1008 ப்ருத்வி சிவலிங்கத்துக்கு 1008 பெண்கள் பூஜைகள் செய்து வழிபட்டனா். இதில் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு வேண்டியும் பெண்கள் பிராத்தனை செய்தனா்.

பூஜையின் நிறைவில் மகாதீபாராதனைக்கு பிறகு, பூஜையில் வைக்கப்பட்ட ப்ருத்வி சிவலிங்கத்தை பெண்கள் கோயில் அருகே உள்ள அமராவதி குளத்தில் விசா்ஜனம் செய்தனா். நாகை, நாகூா், தெத்தி, செல்லூா், பாலையூா், பெருங்கடம்பனூா், பால்பண்ணைசேரி, பொய்கைநல்லூா், தேவங்குடி, திருமருகல், திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1008 பெண்கள் பங்கேற்றனா்.