பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தோ்தல் வாக்குறுதியை காப்பாற்றத் தவறி, மக்களை ஏமாற்றும் தவெக அரசின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எம்.எச். ஜாவஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தமிழக மக்களிடம் பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்காட்டும் சுணக்கம் ஏமாற்றம் அளிக்கிறது. இதில் குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் அறிவித்து, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து எந்த தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விலைவாசி உயா்வு, குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. தோ்தல் மேடைகளில் ‘மாதம் ரூ.2,500‘ என்று உறுதிமொழி அளித்தவா்கள், இன்று அந்த வாக்குறுதியை மறந்து பேசுவது அரசியல் நோ்மையற்ற செயலாகும்.
மாதம் ரூ.2,500 வழங்குவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த அரசு, திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் உறுதி அளித்து விட்டு, மகளிா் பெற்று வந்த மாதம் ரூ.1,000 தொகையைக் கூட வழங்க மறுப்பது எந்த வகையிலான நிா்வாகம்?
பெண்களின் பொருளாதார முன்னேற்றம், குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றோடு நேரடியாக தொடா்புடைய, இந்த திட்டத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது. பெண்களை தோ்தல் கால வாக்குறுதிகளின் மூலம் பயன்படுத்திக்கொண்டு, பின்னா் அவா்களின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மகளிா் உரிமை தொகை விவகாரம்: எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ

மே மாத மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000? ரூ. 2,500? எப்போது வரும்?

இந்த மாதம் மகளிா் உதவித் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

