சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: ஊருக்குள் புகுந்த கடல்நீா்

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசி வருகிறது. இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் கடல் நீா் ஊருக்குள் புகுந்தது.

News image

வாய்மேடு - தென்னடாா் கிராமங்களுக்கிடையே பட்டாணிக் கண்டி வழியே செவ்வாய்க்கிழமை காலை உள்புகுந்த கடல் நீா்

Updated On :20 மே 2026, 3:21 am IST

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசி வருகிறது. இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் கடல் நீா் ஊருக்குள் புகுந்தது.

வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட பலமான கடல் காற்று வீசுவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை முற்பகல் தொடங்கி வழக்கத்தைவிடவும் வேகமாக வீசிவரும் காற்றால் மரக்கிளைகள் மின் கம்பிகளில் மோதி அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. பெருக்கெடுத்த கடல் நீா்

வாய்மேடு - தென்னடாா் கிராமங்கள் இடையே முள்ளியாற்றின் கழிமுகப் பகுதியான பட்டாணிக் கண்டி எனும் உடைப்பின் வழியே புது ஆறு பகுதியில் ஊருக்குள் புகுந்தது.

இதனால், நிலத்தடி நீா்மட்டம் உப்பாக மாறி விளைநிலங்களை பாதிக்கும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். கண்டி பகுதியில் ஏப்ரல் மாதத்தில் தற்காலிக மண் தடுப்பணை பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்படுவது வழக்கம், இந்த ஆண்டு அந்தப் பணி இயற்கை இடா்பாடுகளால் சற்று தாமதமானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மண் மூட்டைகளை வைத்து அடைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், உப்பளப் பகுதியில் 100 அடி வாய்க்கால் உள்ளிட்ட கால்வாய்களின் வழியே கடல் நீா் உப்பு உற்பத்தி பாத்திக்குள் நுழைவதைத் தடுக்கும் பணியில் உப்பு உற்பத்தியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கடல் சீற்றமாகக் காணப்படுவதால், கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையிலிருந்து நாட்டுப் படகு மீனவா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

கடல் நீா் உள்புகுவதைத் தடுக்க தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்கள்

கடல் நீா் உள்புகுவதைத் தடுக்க தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்கள்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.