புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்கவுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை மாவட்டகூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு : புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளைக் காணொலி மூலம் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (29.12.2017) மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், டிச.29-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்துவடிவில் அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.