என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
நெடுங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமில் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்த பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவை புதன்கிழமை அளிக்கப்பட்டது.


நெடுங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமில் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்த பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவை புதன்கிழமை அளிக்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், நெடுங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா ஆசிரியர் செந்தில்குமார் மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சியளித்தார். மாணவர்களுக்கு வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து காரைக்கால்மேடு பகுதியில் உள்ள மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் டெல்காஸ் கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் சண்முகம் திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். திட்ட ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வடிவாம்பாள், டேவிட்பால் ஆகியோர் செய்திருந்தனர். காரைக்கால் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் பாரீஸ்ரவி, நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு குறித்து செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...