துணை நிலை ஆளுநர் நாளை குறைகேட்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வியாழக்கிழமை (மார்ச் 23) குறைகளை கேட்கவுள்ளார்.


புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வியாழக்கிழமை (மார்ச் 23) குறைகளை கேட்கவுள்ளார்.
காரைக்கால் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணி வரை ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்துவடிவில் அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...