பச்சை நிற வரி கேட்பு நோட்டீஸ் பெற்றவர்கள் உடனடியாக வரி செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு மறு அளவீட்டு மதிப்பீடு செய்து, பச்சை நிற வரி கேட்பு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. பச்சை நிற நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வரியை செலுத்த வேண்டும். நோட்டீஸ் பெற்று 15 நாள்களுக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது புதுச்சேரி நகராட்சி சட்டம் 1972-இன் படி எவ்வித முன்னறிவிப்பின்றி அபராதத் தொகை வசூலித்தல் மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.