மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல்  சிகிச்சை பெறுவோருக்கு தமுமுக உதவி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தமுமுகவினர் ஆறுதல் கூறி, உதவிகளை செய்தனர்.
Updated on
1 min read

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தமுமுகவினர் ஆறுதல் கூறி, உதவிகளை செய்தனர்.
காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அக்டோபர் மாதம் முழுவதும் டெங்கு ஒழிப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவோரை, தமுமுக காரைக்கால் மாவட்டத் தலைவர் ஐ. அப்துல் ரஹிம் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் அ. ராஜா முஹம்மது, தமுமுக மாவட்டச் செயலர் எ. கமால் ஹுஸேன், மாவட்டப் பொருளாளர் காசிம் ராஜா, தமுமுக மருத்துவ அணி செயலர் ஃபயாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். சிகிச்சை பெறுவோருக்கு ரொட்டி, பழங்கள் உள்ளிட்டவற்றை அளித்தனர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி. சித்ரா,  உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி. உதயகுமார் , மருத்துவர்கள்  விஜயகுமார்,  அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ. ராஜா முஹம்மது கூறும்போது, நிகழ் மாதம் முழுவதும் டெங்கு ஒழிப்பு மாதமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சுகாதாரமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசி வருகிறோம்.
டெங்கு பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு மனரீதியில் உறுதியுடன் இருக்கவும், ஆரோக்கியம் கிடைக்கவும் நாங்கள் நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி, பல்வேறு உணவுப் பொருள்களை அளித்தோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com