வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஆய்வு செய்யும் வகையில் அரசு செயலர் வெள்ளிக்கிழமை (அக். 20 ) காரைக்கால் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஆர். கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1.1.2018 -ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தற்போது காரைக்காலில் நடைபெற்று வருகிறது.
இந்த பணியை ஆய்வு செய்யும் வகையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளரான புதுச்சேரி அரசு செயலர் டி. மணிகண்டன் அக். 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2-ஆவது முறையாக காரைக்காலுக்கு வருகை தரவுள்ளார். காலை 10.30 ணியளவில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும், காலை 11 மணியளவில் பொதுமக்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார். எனவே, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணி - 2018 தொடர்பான கருத்துகளை அல்லது குறைகளை தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.