நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 6:51 am IST

காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட அத்திப்படுகை கிராமத்தில் ஏப். 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. முகாமில், கிராம மக்களுக்கு ஆரோக்கியம் குறித்து பல், கண் மற்றும் பொது மருத்துவ விழிப்புணர்வு, கிராமத் தூய்மை, தனிமனித தூய்மை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தவிர, கிராமத்தில் உள்ள கோயில்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தூய்மை செய்யப்பட்டன. 
முகாம் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, கிராம இளைஞர்கள் மதுஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. குழந்தைசாமி, மதுவினால் ஏற்படும் கேடு குறித்து கிராம இளைஞர்களுக்கு விளக்கிப் பேசியதுடன், மதுவை முற்றிலும் தவிர்க்க ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அப்போது, கிராம இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுபழக்கத்துக்கு அடிமையாகமாட்டோம் என உறுதிமொழி ஏற்று, உறுதிமொழி உடன்படிக்கை பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
முகாமில், கல்லூரி முதல்வர் பி. தம்பிதுரை, காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. லட்சுமணபதி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே. ஞானமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற கிராம இளைஞர்களுக்கு கல்லூரி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.