குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

திருப்பட்டினத்தில் ஆடிப்பூர விழா: மின் அலங்கார சப்பரப்படலில் அம்மன் வீதியுலா

திருப்பட்டினத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழாவையொட்டி மின் அலங்கார சப்பரத்தில், ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திருப்பட்டினத்தில் நடைபெறும் ஆடிப்பூர விழாவையொட்டி மின் அலங்கார சப்பரத்தில், ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
திருப்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம் கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.
பகல் வேளையில் ஆடிப்பூரத்தம்மன் பிராகாரப் புறப்பாடும், இரவு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி சூரிய பிரபை, 5-ஆம் தேதி சந்திர பிரபை, 6-ஆம் தேதி பூத வாகனத்திலும், 7-ஆம் தேதி அன்னவாகனத்திலும் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மின் அலங்கார சப்பரப் படல் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் ஸ்ரீ ஆடிப்பூரத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார். சோடச உபசார சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின் பிராகாரப் புறப்பாடு செய்யப்பட்டு, மின் அலங்கார சப்பரத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டார்.
சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் சப்பரத்தை பக்தர்கள் நான்கு வீதிகள் வழியாக இழுத்துச்சென்றனர். ஒவ்வொரு பகுதியிலும் சப்பரம் நிறுத்தப்பட்டது. ஏராளமானோர் அர்ச்சனை செய்து அம்பாளை வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சிகளான வெண்ணெய்த்தாழி சேவை, தேரோட்டம், மின் அலங்கார புஷ்ப பல்லக்கு வீதியுலா உள்ளிட்டவை அடுத்தடுத்த நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.