திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமிகள் மகா குருபூஜை விழா ஏற்பாடுகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமிகள் 104-ஆவது மகா குருபூஜை விழா முன்னேற்பாடுகளை சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:38 am IST

அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமிகள் 104-ஆவது மகா குருபூஜை விழா முன்னேற்பாடுகளை சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் கிராமத்தில் சிவசித்தர் சித்தானந்த சுவாமிகள் மடம் உள்ளது. இவரது அடக்க இடத்தில் சித்தானந்த சுவாமிகள் உருவச்சிலை வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது 104-ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா திங்கள்கிழமை (ஆக.20) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை காலை சித்தானந்த சுவாமிகள் மடத்தில் கணபதி ஹோமம், திருவிளக்கு வழிபாடு நடைபெறுவதோடு, மாலை 5 மணிக்கு சிவசித்தர் மகா ஹோமம் நடைபெறுகிறது. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகா குரு பூஜை சிறப்பு வழிபாடு, வீதியுலா  நடைபெறுகிறது. 
இந்நிலையில், குரு பூஜைக்கான ஏற்பாடுகளை சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான  கீதாஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தார். அவரை அக்கரைவட்டம்  சோதமநாதசுவாமி கோயில் தனி அலுவலர் டி. பால்ராஜ் மற்றும் நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சித்தர் பீடத்துக்குச் சென்று தரிசனம் செய்த கீதாஆனந்தன், அபிஷேக ஆராதனை நடைபெறும் பகுதி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம், அன்னதானக் கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
இதுகுறித்து தனி அதிகாரி பால்ராஜ் கூறும்போது, சித்தர் மகா குருபூஜையில், அபிஷேக ஆராதனை, அன்னதானம் முக்கியமாகத் திகழ்கிறது. செவ்வாய்க்கிழமை காலை திருமலைராஜனாற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடமெடுத்து பீடத்துக்கு வருவர்.
அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து சித்தருக்கு சித்ரான்னங்களுடன் ஆராதனை நடைபெறும். இதையொட்டி, முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தரவுள்ளனர். 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.