காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி ஜூன் மாதம் அறுவடைப் பணி தொடங்கிய நிலையில், 3-ஆம் பருவ அறுவடை தற்போது ஆங்காங்கே நடைபெற்றுவருகிறது.
காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடைபெற்றுவருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் விழுதியூர், பேட்டை, அகலங்கண்ணு, சேத்தூர், இளையான்குடி, புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இது நடைபெறுகிறது.
பருத்தி 5 மாத பயிர் என்ற நிலையில், நிகழாண்டு பருத்தி சாகுபடி பருவத்தில் மழை பெய்து இழப்பு ஏற்படாவிட்டாலும், சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டதாக பரவலான விவசாயிகளின் கருத்தாக இருந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் பருத்தி செடிகளில் அறுவடைப் பணி தொடங்கப்பட்டது. பொதுவாக பருத்தி 3 பருவமாக அறுவடை நடைபெறக்கூடியதாகும்.
தற்போது அண்டூர் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் பருத்தி அறுவடையில் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது :
தை மாத நெல் அறுவடைக்குப் பின்பு பருத்தி சாகுபடி தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு நெல் பயிரிடும் காலம் தவறியதால் நிகழாண்டு தை மாதத்திற்குப் பின்னரும் ஆங்காங்கே நெல் அறுவடை செய்யப்பட்டது. இதனால் பருத்தி பயிரிடும் காலமும் சற்றுத் தள்ளிப்போனது. பருத்தியை 3 பருவமாக அறுவடை செய்ய முடியும்.
முதல் அறுவடை ஜூன் மாத வாக்கில் செய்யப்பட்டது. 2-ஆம் பருவம் ஜூலையிலும், நிறைவுப் பருவம் தற்போது செய்யப்படுகிறது. காவிரி நீர் வந்து நெல் பயிர் செய்யும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், பருத்தி சாகுபடியாளர்களும் அறுவடையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
ஓர் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ பஞ்சு ரூ.52 முதல் 55-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.37 என்ற விலைக்கு வாங்கினர். நிகழாண்டும் அதே விலையிலேயே வியாபாரிகள் வாங்க வருகின்றனர். 3-ஆம் பருவத்தில் பூச்சுத் தாக்குதல் ஏற்பட்டது. முற்றிலும் அறுவடை செய்து முடித்தவுடன் சேதாரம் தெரியவரும் என்றனர்.
வரும் ஆண்டு முதல் நெல் கொள்முதல் நிலையத்தை முறையாக அரசு சார்பில் தொடங்கவேண்டும். அதுபோல பருத்தி கொள்முதல் கிடங்கு அமைத்து, விவசாயிகளுக்கு
கட்டுப்படியாகும் விலை நிர்ணயித்து பஞ்சு வாங்க நடவடிக்கை எடுத்தால், பருத்தி விவசாயிகள் ஓரளவு பயன்பெறுவர். அடுத்த ஆண்டு கூடுதலான நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி நடத்த முடியும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா
முடங்கிய உப்பூா் அனல் மின் திட்டம் மீண்டும் உயிா் பெறுமா?

தமிழக பட்ஜெட்: தொழில்முனைவோரின் எதிா்பாா்ப்புகள்!

பெற்றோா் இடப்பெயா்வால் இடைநின்ற 171 மாணவா்கள்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


