அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமிகள் 104-ஆவது மகா குருபூஜை விழா முன்னேற்பாடுகளை சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் கிராமத்தில் சிவசித்தர் சித்தானந்த சுவாமிகள் மடம் உள்ளது. இவரது அடக்க இடத்தில் சித்தானந்த சுவாமிகள் உருவச்சிலை வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது 104-ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா திங்கள்கிழமை (ஆக.20) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
திங்கள்கிழமை காலை சித்தானந்த சுவாமிகள் மடத்தில் கணபதி ஹோமம், திருவிளக்கு வழிபாடு நடைபெறுவதோடு, மாலை 5 மணிக்கு சிவசித்தர் மகா ஹோமம் நடைபெறுகிறது. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகா குரு பூஜை சிறப்பு வழிபாடு, வீதியுலா நடைபெறுகிறது.
இந்நிலையில், குரு பூஜைக்கான ஏற்பாடுகளை சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன், ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தார். அவரை அக்கரைவட்டம் சோதமநாதசுவாமி கோயில் தனி அலுவலர் டி. பால்ராஜ் மற்றும் நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சித்தர் பீடத்துக்குச் சென்று தரிசனம் செய்த கீதாஆனந்தன், அபிஷேக ஆராதனை நடைபெறும் பகுதி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம், அன்னதானக் கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
இதுகுறித்து தனி அதிகாரி பால்ராஜ் கூறும்போது, சித்தர் மகா குருபூஜையில், அபிஷேக ஆராதனை, அன்னதானம் முக்கியமாகத் திகழ்கிறது. செவ்வாய்க்கிழமை காலை திருமலைராஜனாற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடமெடுத்து பீடத்துக்கு வருவர்.
அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து சித்தருக்கு சித்ரான்னங்களுடன் ஆராதனை நடைபெறும். இதையொட்டி, முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தரவுள்ளனர். 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!
ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


