
அம்மையார் குளக்கரை மின் விளக்கு பழுது: மணி மண்டபத்தை பயன்படுத்திய வேளாங்கண்ணி பக்தர்கள்
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை இரவு பழுதானதால், வேளாங்கண்ணிக்கு
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை இரவு பழுதானதால், வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள் அம்மையார் குளக்கரையில் ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அம்மையார் மணிமண்டபத்தை பயன்படுத்திக்கொண்டனர் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றத்துக்கு காரைக்கால் வழியே பாத யாத்திரையாக சென்ற ஆயிரக்கணக்கானோர், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடம், வணிக வளாகம், குடியிருப்புகள் வாயில் பகுதிகளை ஓய்வுக்காக பயன்படுத்திக்கொண்டனர். கடந்த திங்கள்கிழமை வரை காரைக்கால் அம்மையார் மணிமண்டபம், அம்மையார் குளத்தின் நான்கு புற நடைமேடையையும் வேளாங்கண்ணி பக்தர்கள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், செவ்வாய்க்கிழமை குளம் பகுதியில் உள் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டதாகவும், இதனால் பக்தர்கள் குளக்கரையை பயன்படுத்த முடியாமல் போனதாகவும், கோயில் நிர்வாகம் மீது புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து, ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு செயலர் எம்.பக்கிரிசாமி புதன்கிழமை கூறியது:
வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் திங்கள்கிழமை வரை தினமும் அம்மையார் மணி மண்டபத்தையும், குளக்கரையையும் பயன்படுத்தினர். செவ்வாய்க்கிழமை குளக்கரையில் உள்ள ஹைமாஸ் விளக்கு பழுதாகிவிட்டதால் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. செவ்வாய்க்கிழமை இரவு பக்தர்கள் வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டது. காலம் காலமாக மத நல்லிணக்கத்துக்கு காரைக்கால் அம்மையார் கோயில் பயன்பட்டுவருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





