மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போலீஸார் இன்றுமுதல் சைக்கிளில் ரோந்துப் பணி

புதுச்சேரியில் ரோந்துக் காவலர்களுக்கான சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் வே. நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த நிலையில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:40 pm

DIN

புதுச்சேரியில் ரோந்துக் காவலர்களுக்கான சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் வே. நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த நிலையில், காரைக்கால் போலீஸாருக்கான சைக்கிள் திங்கள்கிழமை வந்து சேர்ந்தது. செவ்வாய்க்கிழமை (பிப். 6) முதல் சைக்கிள் ரோந்து தொடங்கும் என காவல்துறை அலுவலர் தெரிவித்தார்.
காவல்நிலையங்கள் மூலம் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெறும் ரோந்துப் பணியில் ஆண் காவலர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மோட்டார் சைக்கிள், ஜீப் மூலம் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதம் காவல்நிலையங்களை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பெண்களும் ரோந்துக் காவலர்களாக நியமிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பெண் காவலர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் சைக்கிளில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், புதுச்சேரி காவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் வழங்கப்பட்டது.
காரைக்கால் பகுதியில் உள்ள காரைக்கால் நகரக் காவல்நிலையம், நிரவி, திருப்பட்டினம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு மற்றும் அம்பகரத்தூர் புறக்காவல் நிலையத்தைச் சேர்ந்த ரோந்துக் காவலர்களுக்கான சைக்கிள் புதுச்சேரியிலிருந்து திங்கள்கிழமை காரைக்கால் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி திங்கள்கிழமை கூறியது:
ஒரு காவல்நிலையத்துக்கு 4 சைக்கிள் வீதம் 24 சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. புறக்காவல் நிலையத்துக்கு 2 சைக்கிள் வழங்கப்படவுள்ளது. ஒரு சைக்கிள் மாற்றுக்காக வைக்கப்படும். இவை திங்கள்கிழமை இரவு அந்தந்த பகுதி  காவல்நிலையத்தினருக்கு வழங்கப்படும். இவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் சைக்கிளில் ரோந்துப் பணியை மேற்கொள்வர்.
கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் குறுகிய நிலையில்  இருக்கும், சைக்கிளில் சென்றால் ஒவ்வொரு பகுதியையும் பொறுமையாக கவனித்துச் செல்ல முடியும், வீதியில் சிலரிடம் நின்று பேசமுடியும் என்பதால் சைக்கிள் ரோந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள், ஜீப் பயன்படுத்தப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.