தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கண், பல் மருத்துவ முகாம்

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:27 pm

DIN

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் பொறியியல் பட்டதாரியான விநோதினி என்பவர் முகத்தின் மீது, ஒருதலைக் காதல் தொடர்பாக கடந்த 2013 -ஆம் ஆண்டு அமில வீச்சு நடைபெற்ற நிலையில்  அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அனுதாப அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரது நினைவு நாளையொட்டி, திங்கள்கிழமை அவரது குடும்பத்தினர், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியருக்கு கண் மற்றும் பல் பரிசோதனை முகாமை நடத்தினர்.
காரைக்கால் தனியார் மருத்துவ மையத்திலிருந்து கண் மற்றும் பல் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து மாணவியருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
இந்த முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் ஆகியோர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டனர். கல்லூரி முதல்வர் (பொ) கல்யாணசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காலை முதல் மாலை வரை ஏராளமான மாணவியருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள், மருத்துவக் குழுவினர், கல்லூரி நிர்வாகத்தினருக்கு விநோதினி குடும்பத்தைச் சேர்ந்த சக்திவேல் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.